.......
வேலணை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 5 இல் கற்றல் நடவடிக்கைகளை நிறைவுசெய்து தரம் 6 செல்லவுள்ள ஒரு தொகுதி மாணவர்களுக்காண கற்றல் உபகரணங்கள் கொழும்பு லயன்ஸ் கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2025) பிற்பகல் வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்திரது நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்ட இந்த கற்றல் உககரணங்கள்
புங்குடுதீவிலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களுடன் , வேலணை சைவப்பிரகாசா மற்றும் துறையூர் ஐயனார் வித்தியாலயங்களின் தரம் 5 மாணவர்களை உள்ளடக்கி சுமார் 100 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கிவைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் இலங்கையின் லயனஸ் கழக ஆளுநர் பரணதந்திரி, யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் திலக்தனபால,மற்றும் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் KPP பத்தரண ஆகியோர் அதிதிகளாக கலந்து பொதிகளை வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0000
- 491