மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சில மாதங்களாக சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர் மற்றும் சமூக ஆர்வலரான இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
தனது இளமை பருவத்தில் மார்க்சிஸ்ட் கிளர்ச்சியாளர், விக்டர் ஐவன் பின்னர் சர்ச்சைக்குரிய சிங்கள பத்திரிகையான ‘ராவய’வின் ஆசிரியரானார். ராவய பத்திரிகையில் தொடர்ந்து 25 வருடங்கள் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது
000
- 783