Feed Item
·
Added a post

ஒருமுறை ஒரு பேச்சாளர் ஒரு கிராமத்துக்கு பேச அழைக்கப்பட்டார், அவருக்கு தான் ஒரு சிறந்த பேச்சாளர் என்ற கர்வம் உண்டு. கிராமம் சென்ற அவரை ஒரு குதிரை வண்டிக்காரன் அழைத்து வர தயாராக இருந்தான். வண்டியில் போகும்போது பேச்சாளாளர் கிராமத்தில் எவ்வளவு பேர் தன் பேச்சை கேட்க வருவார்கள் என்று குதிரைகாரனிடம் கேட்டான் . அதற்கு நிறைய பேர் வருவார்கள் என்றான்.

பேச்சு நடக்கும் மேடை சென்றால் ஒருவரையும் காணவில்லை. சற்று குழப்பம் அடைந்த பேச்சாளர் குதிரைகாரனிடம் ஏனப்பா முழு காசு வாங்கி விட்டேன் இப்பொழுது பேசாமல் சென்றால் எப்படி என்று கேட்க.

அவனோ !!!!!! சாமி !!!!!!!!!!! எனக்கு அதெல்லாம் தெரியாது , நான் ஒரு குதிரைக்காரன் என்னிடம் ஒரு 20 குதிரை இருக்கிறது குதிரைக்கு புல் எடுத்து சென்றால் அந்த 20 குதிரைக்கும் புல் வைத்து விட்டு வருவது என் வேலை அதை தவற எனக்கு ஒன்றும் தெரியாது சாமி ! என்றான்.

பேச்சாளாரோ படிக்காத குதிரைக்காரன் நமக்கு புத்தி சொல்கிறானே என கருதி பேச ஆரம்பித்தார் சுமார் ஒரு மணி நேரம் புடி புடி என்று இடி முழக்கமிட்டு பேசி முடித்தார் யாரும் இல்லாத கூட்டத்தில் .

அமைதியாக தரையில் அமர்ந்திருந்த ஒரே பார்வையாளனாக இருந்த குதிரை காரனிடம் , என்னா ! எப்படி இருந்தது என் பேச்சு என்று கர்வத்துடன் கேட்க !

அவனோ மறுபடியும் !ஐயா !! எனக்கு இதெல்லாம் தெரியாது ! நான் குதிரைகாரன் !என்னிடம் 20 குதிரை இருக்கிறது . 20 குதிரைக்கு புல் எடுத்து செல்வேன் . ஆனால் அங்கு ஒரு குதிரை தான் இருந்தது என்றால் ஒரு குதிரைக்கு மட்டும் உணவு வைத்து விட்டு மீதியை எடுத்து வந்து விடுவேன் !

அவ்வளவு தான் ஐயா எனக்கு தெரியும் என்று சொன்னான் !

பேசலாருக்கும் தன் கர்வம் புரிந்தது . வெட்கி தலை குனிந்தார்,

  • 1028