Feed Item
·
Added a news

ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கூடுகிறது.  

குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நாளையதினம் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நாளை முதல் போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்படும்.

மூன்று கட்டங்களாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இந்த போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக பல பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததன் பின்னர், 33 பணயக் கைதிகளை ஹமாஸ் தரப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 116 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

000

  • 529