Feed Item
·
Added a post

.ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று மகன்கள். மரண படுக்கையில் இருக்கும் பொழுது மூன்று பேரையும் அழைத்து சொன்னார். எனது சொத்து முப்பது கோடி. நான் உங்களுக்கு சமமாக அளிக்கிறேன். அனால் ஒரு நிபந்தனை. நான் இறந்த பின் என்னை புதைக்கும் பொழுது, அதில் பாதியை ஒவ்வருவரும் போட வேண்டும். அப்போது தான் அடுத்த பிறவியிலும் நான் பணக்காரனாக முடியும்.

அனைவரும் சம்மதித்தனர்ஒரு நாள் அவர் இறந்து போனார். காரியங்கள் முடிந்த பின்பு மகன்கள் பேசி கொண்டார்கள். 'நீ அப்பா சொன்ன மாதிரி காசு புதைத்தாயா ?

முதல் மகன் : நான் ஒரு கோடி போட்டேன்.

ரெண்டாவது மகன்: நான் பரவாயில்லை. மூணு கோடி போட்டேன். நீ என்னை விட மோசம்.

மூன்றாவது மகன்: நீங்கள் ரெண்டு பேரும் அப்பாவுக்கு குடுத்த சத்தியத்தை மீறி விட்டீர்கள். நான் அப்படியில்லை. அப்பா அஞ்சு கோடி தான் கேட்டார். ஆனாலும் நான் அவர் கொடுத்த பத்து கோடிக்கும் ஒரு செக் எழுதி குழியில் போட்டுட்டேன் என்றான்.

  • 157