Feed Item
·
Added a news

சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும், சீனாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தின் போது சீன மக்கள் குடியரசிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தாம் தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீன அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.

சீன மக்கள் குடியரசின் தலைவர் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அரச சபை பிரதமர் லீ சியாங், மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

இதனையடுத்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இலங்கை - சீன கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

சுமுகமான மற்றும் நட்பு சூழ்நிலையில் இரு தரப்பினருக்கிடையில் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படுத்தல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு மண்டலம் - ஒரு பாதை திட்டத்தை மேம்படுத்தல்,பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகள் தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வதற்கும் அவற்றின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், சீன - இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

இரு தரப்பினரும் தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில் தமது பரஸ்பர ஆதரவை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சீன அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தில் பிரித்தெடுக்க முடியாத பிரதேசம் என்பதையும் அங்கீகரித்து ஒரே சீனா கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுமையும் குறிப்பிடத்தக்கது

000

  • 326