தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக வேலை செய்யும் போது சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 87 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் வியாழக்கிழமை (16) தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி மீட்பு நடவடிக்கையில் 78 உடல்கள் மீட்கப்பட்டன, மேலும் 246 உயிர் பிழைத்தவர்களும் திங்கள்கிழமை மீட்பு நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ஆழமான நிலத்தடியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தென்னாப்பிரிக்க தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் அத்லெண்டா மாதே தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கைக்கு முன்னர் மேலும் ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுரங்கத் தொழிலாளர்கள் சட்டவிரோத நடவடிக்கையை முன்னெடுத்ததால், அவர்களுக்கு உதவ மாட்டோம் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், தாங்கள் சொந்த மீட்பு முயற்சிகளை மேற்கொண்டதாக சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
சுரங்கத் தொழிலாளர்கள் பட்டினி மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இறப்புக்கான உறுதியான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
000ஷ
- 338