Feed Item
Added a news 

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

  • 654