Feed Item
·
Added a news

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் ௲ கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரு வீரர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

சற்று முன்னர் வரை 76 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 282 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்த போட்டியின் முக்கிய அம்சமாக சுமார் 1,445 நாட்களுக்கு பின்னர் பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அபாராமாக திறமையை வெளிப்படுத்தி வரும் பும்ரா கடந்த காலங்களில் வீசிய 4,484 பந்துகளுக்கு பின்னர் இன்று முதல் முறையாக சிக்ஸர் அடிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணியின் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள சாம் கோன்ஸ்டஸ் பும்ராவின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார். அவர் வீசிய இரண்டாவது ஓவரில் மட்டு 16 ஓட்டங்களை கோன்ஸ்டஸ் அடித்திருந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோன்ஸ்டஸ் படைத்தார். இந்தப் போட்டியின் மற்றுமொரு முக்கிய சம்பவமாக விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்ற போது எதிர்திசையில் கோன்ஸ்டஸ் நடந்து வந்தார். இதன்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர்.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மைதானத்தில் இருந்த உஸ்மன் கவஜா மற்றும் நடுவர்கள் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர்.

ஆனால் அந்த இடத்தில் விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் அந்த தருணத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விசாரிப்பார் என அவுஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

ஒருவேளை அதன் முடிவில் அவர்கள் மீது தவறு இருந்தால் நடுவர் லெவல் 1 அல்லது லெவல் 2 விதிமுறை மீறியதாக பரிந்துரை செய்வார். அதை ஏற்றுக் கொண்டு ஐசிசி 3 அல்லது 4 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுக்க (லெவல் 2 விதிமுறை) வாய்ப்புள்ளது.

ஒருவேளை லெவல் 2 விதிமுறையை மீறியதற்காக 4 புள்ளிகளை பெற்றால் இந்தத் தொடரின் 5 வது போட்டியில் விராட் கோலி அல்லது கோன்ஸ்டஸ் விளையாடுவதற்கு தடை பெறுவார்கள். லெவல் 1 விதிமுறை மீறியதாக கருதப்பட்டால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

000

  • 541