Feed Item
·
Added article

குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்தூரை அடுத்த பொள்ளாச்சியில் நடந்தது. அதன் பின்னர் தற்போது கோவை வேளாண்மை கல்லூரியில் செட் ஒன்று அமைத்து படமாக்கி வருகிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

தற்போது படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்த்தில் நடித்தும் வருவதாக சொல்லப்படுகிறது. அவரும் சூர்யாவும் படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

  • 808