Feed Item
·
Added a news

2025 செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும், செம்பியன்ஸ் கிண்ண 2025 போட்டித் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் கலப்பின(ஹைபிரிட்) மாதிரியின் கீழ் நடைபெறவுள்ளன.

இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெற உள்ளன.அத்துடன் இந்திய அணி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறினால், அந்த இரண்டு போட்டிகளும் துபாயில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஏனைய போட்டிகள் பாகிஸ்தானிலேயே(Pakistan) நடைபெறவுள்ளன.

போட்டிகளுக்கான ஏ குழுவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி குழுவில் தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் பெப்ரவரி 19 ஆம் திகதியன்று, பாகிஸ்தான எதிர் நியூசிலாந்து போட்டி கராச்சியில் நடைபெறும்.

பெப்ரவரி 20ஆம் திகதி பங்களாதேஸ் எதிர் இந்தியா போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 21இல் ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி கராச்சியில் நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 22 அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து போட்டி லாகூரில் நடைபெறுகிறது

பெப்ரவரி 23 இல் பாகிஸ்தான் எதிர் இந்தியா போட்டி துபாயில் இடம்பெறுகிறது.

பெப்ரவரி 24 பங்களாதேஸ் எதிர் நியூசிலாந்து போட்டி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது

பெப்ரவரி 25 அவுஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது

பெப்ரவரி 26இல் ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து போட்டி லாகூரில் நடைபெறும்

பெப்ரவரி 27இல் பாகிஸ்தான் எதிர் பங்களாதேஸ் போட்டி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது

பெப்ரவரி 28 இல் ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா போட்டி லாகூரில் நடைபெறும்

மார்ச் 1, தென்னாப்பிரிக்கா எதிர் இங்கிலாந்து போட்டி கராச்சியில் நடைபெறும்

மார்ச் 2, நியூசிலாந்து எதிர் இந்தியா போட்டி துபாயில் நடைபெறும்.

மார்ச் 4, அரையிறுதி 1, துபாயில் நடத்தப்படும்.

மார்ச் 5, அரையிறுதி 2, லாகூரில் நடத்தப்படும்.

மார்ச் 9, இறுதிப் போட்டி, லாகூரில் நடத்தப்படும், இந்தியா தகுதி பெற்றால், துபாயில் நடத்தப்படும்.

000

  • 988