கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா வடபகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் கருதி சீனா அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வலைகள் கடற்றொழிலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.2024) யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இதன்போது, 200 கடற்றொழில் பயனாளிகளுக்கு 06 வலைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு பயனாளிக்கு 60,000 பெறுமதியான வலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராசசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கடந்த ஆட்சிக்காலத்தில் குறித்த வலைகள் வழங்கிவைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் அக்காலப்பகுதியில் குறித்த உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்டாது இருந்த நிலையில் தற்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 983