Feed Item
·
Added a news

கிரீன்லாந்தின் உரிமை, கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு அவசியம் என்று அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் கூறிய நிலையில், "கிரீன்லாந்து எங்கள் நாடு; அது விற்பனைக்கு இல்லை" என கிரீன்லாந்து நாட்டு பிரதமர் மூட் எகெடே பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் இடையே அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு, அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக வட அமெரிக்கா கண்டத்தை சேர்ந்ததாகும்.

இந்த நாட்டின் புவியியல் முக்கியத்துவத்தை கருதி, அமெரிக்கா மிகப்பெரிய விமானப்படை தளத்தை இந்நாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில், தங்கள் நாட்டின் விமானப்படை இங்கு அமைந்திருப்பதால், அந்த நாட்டை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள அமெரிக்கா விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த நிலைய்ல் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக கிரீன்லாந்து உரிமை மற்றும் அதன் கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது என்று டிரம்ப் கூறியதற்கு பதிலளித்த கிரீன்லாந்து பிரதமர், "கிரீன்லாந்து எங்களுடைய நாடு ஒருபோதும் விற்பனை செய்ய முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார். டிரம்ப் பதவியேற்றதும் இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 1250