தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையினைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் கையளித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட நீதியரசர்கள் ஆயம் நேற்று பிறப்பித்த உத்தரவுக்கமைய அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையைக் கையளித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளை மீள நடத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அடங்கிய குழுவினால் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் ஆயம் தெரிவித்துள்ளது.
000
- 1447