சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய ஜனாதிபதி -
எதிர்க்கட்சிக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பொதுவாக, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை புகழ்ந்து பேசுவதில்லை.
ஆனால் IMF உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அத்தகைய விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்பதை நான் எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை. IMF நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2024 இல் இரண்டு சதவீதமாக மதிப்பிட்டுள்ளது. அந்த வளர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க நான் விரும்பினேன்.
எனவே, ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, திறன் மேம்பாட்டை அதிகரிக்க பொதுமக்களையும் வணிகர்களையும் ஊக்குவித்துள்ளோம்.
இதன் விளைவாக இன்று நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்த சாதனைக்காக உழைத்த நிதியமைச்சகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதில் சிலவற்றை வரி வருவாயாகவும் பெற்றுள்ளோம். அதுவும் எங்கள் வருமானம் அதிகரிக்க வழிவகுத்தது. IMF உடனான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் இதையெல்லாம் செய்ய முடிந்தது. எனவே, அந்த ஒப்பந்தத்தை பாதுகாத்து தொடர வேண்டியது அவசியம்.
அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் திறன் அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ இல்லை. அப்படிச் செய்தால் மீண்டும் இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் உருவாகும்.
தற்போது இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடத் தயாராக வேண்டும். அதன் பின்னர், வங்கிகளும் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அதேநேரம், மக்களுக்கும் விரைவில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 851