அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னை சந்திக்க விரும்பினால் தானும் அவரை சந்திக்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இருவரும் பேசி நான்கு ஆண்டுகள் கடந்த போதிலும், ட்ரம்ப்பை சந்திப்பதற்கான விருப்பத்தை புடின் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், எனது மரணம் குறித்த வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா தொடர்பில் கருத்து வெளியிட்ட புடின், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு வரலாற்றில் இல்லாத அளவில் சுமூகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் உலக அரங்கில் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- 1451