Feed Item
·
Added a post

ஒருநாள் ஒரு முதியவர் கடற்கரையோரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு சின்ன பையன் பெரிய அலைகளால் கரை சேர்ந்த நட்சத்திர மீன்களைத் தூக்கிக் கடலில் வீசிக்கொண்டிருந்தான். முதியவர் அந்தச் சின்ன பையனிடம் சென்று, ‘நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.

அந்தச் சின்ன பையன் முதியவரிடம், ‘இல்லை தாத்தா! இந்த நட்சத்திர மீன்கள் மீது சூரிய ஒளிபட்டால் அவைகள் இறந்துவிடும். அதனால்தான் அதை மீண்டும் கடலில் தூக்கி வீசுகிறேன்’ என்று கூறினான். அதைக்கேட்ட முதியவர்,

' இதென்ன அபத்தமாக இருக்கிறது. இந்தக் கடற்கரை எத்தனையோ கிலோ மீட்டர் தூரம் நீண்டு இருக்கிறது. அதில் எத்தனையோ நட்சத்திர மீன்கள் வந்து கரை ஒதுங்கும். இந்த ஒரு சில நட்சத்திர மீன்களை நீ கடலில் தூக்கி எறிவதால் மட்டும் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது’ என்று கேட்டார்.

இதைக்கேட்ட சின்ன பையன் தன் கையில் இருந்த மீன்களைக்காட்டி, ‘இதோ! இதனுடைய வாழ்க்கைக்கு நான் செய்வது பெரிய மாற்றம்தான்’ என்று சொல்லிக் கொண்டே அவைகளை மீண்டும் கடலில் தூக்கிப்போட்டான்.

இந்தக் கதையில் சொன்னதுப்போல, நாம் ஆசைப்படுவதுப் போல

இந்த உலகம் ஒரே நாளில் மாறிவிடப்போவதில்லை.

பெரிய மாற்றத்தை எதிர்ப்பார்த்தால், அதைச் சின்ன சின்ன செயல்களில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதுவும் அந்தச்செயலை நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அப்போதே ஒரு பெரிய மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும். இதைப் புரிந்துக்கொண்டு செயல்பட்டால், வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

  • 1390