தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, மார்கழி மாதம் 2ஆம் தேதி
மேஷபம் ராசி:
புதிய யுக்திகளால் தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம் ராசி:
உத்தியோக பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயனற்ற வாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும். இடமாற்றம் சார்ந்த எண்ணம் கைகூடும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் லாபம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
மிதுனம் -ராசி:
முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சமூகப் பணிகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம் -ராசி:
உத்தியோகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமுகப் பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி -ராசி:
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
துலாம் -ராசி:
தகவல் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்- ராசி:
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழல் உண்டாகும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு -ராசி:
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பழகும் தன்மையில் சில மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம் -ராசி:
பயணம் செய்வதில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நுட்பமான சில விசயங்களை புரிந்துகொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு மறையும். மனதளவில் புதிய பக்குவம் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம் –ராசி:
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வமும், விரயமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தடை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம் -ராசி:
தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் மறையும். போட்டி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 1118