Feed Item
·
Added a news

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17) நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

,தேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மேற்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் மாத்தளை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேலும், மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

000

  • 1198