சுற்றுலா நியூஸிலாந்து (New Zealand) அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி, 423 ஓட்டங்களால் சிறப்பு வெற்றியை பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 453 ஓட்டங்களையும் பெற்றது.
எனினும் இங்கிலாந்து அணியால், முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 234 ஓட்டங்களையும் மாத்திரமே பெறமுடிந்தது.இந்தநிலையில் அந்த அணி 423 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
000
- 967