இந்தியாவில் பல மொழிப் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல மொழிகளிலும் இவர் பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு தேவ்தாஸ் என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.
இவர் பாடிய ஒவ்வொரு பாடலும், ரசிகர்களுக்குப் பிடித்தமானதாகவும் அமைந்தது. அவை ஹிட்டும் ஆகின. இதனால், இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களின் ஃபேவரெட் பாடகியாகியானார்.
தமிழில், முன்பே வா, நினைத்து நினைத்து பார்த்தென். சாரல்,. உருகுதே உருகுதே, எனக்குப் பிடித்த பாடல், ஒன்ன விட எனப் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, இமான், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், தமன் என முன்ன்ணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதுவரை 4 தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகள் வென்றுள்ளார். இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
- 1046