Feed Item

தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, மார்கழி மாதம் 1ஆம் தேதி

 

மேஷபம் ராசி:

பண வரவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மனதளவில் துணிவோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். நலம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை

 

ரிஷபம் ராசி:

மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. அரசுப் பணிகளில் மாற்றங்கள் காணப்படும். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம் -ராசி:

தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சேவைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனைப்போக்கில் சில தெளிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். ஆசை மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

 

கடகம் -ராசி:

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள்

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம் -ராசி:

கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கன்னி -ராசி:

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய விரயம் உண்டாகும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 

துலாம் -ராசி:

பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். விவேகமான செயல்கள் வீண் பிரச்சனைகளை தவிர்க்கும். உடன் இருப்பவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்- ராசி:

பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

தனுசு -ராசி:

நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு

 

மகரம் -ராசி:

விருந்தினர்களின் வருகை ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம் –ராசி:

மறைமுகமான எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் நம்பிக்கை மேம்படும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவப்பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மீனம் -ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பிறமொழி மக்களால் ஆதாயம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

 இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 1205