Feed Item
·
Added a post

வெடித்து விட்டது என்பதற்காக அந்த கிராமமே பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிக் கொண்டிருந்தது .

எரிமலையின் பாறை குழம்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவிஅந்த கிராமத்தையும் வீடுகளையும் அதன் தீ பொசுக்கி கொண்டிருந்தது.

மக்கள் எல்லோரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவள் மட்டும் வீட்டில் இருந்த எந்த பொருளையும் எடுக்காமல் இரண்டு குழந்தைகளையும் ஒன்றை மடியில் தூக்கி வைத்துக் கொண்டும் இன்னொன்றை கையில் பிடித்துக் கொண்டும் மக்களோடு மக்களாக ஊருக்கு வெளியேஓடிக்கொண்டே இருந்தால்.

கிராமமக்களின் ஓட்டத்தை விட பாறை குழம்பின் ஓட்டம் வேகமாக இருந்தது .பல்வேறு இடங்களில் மக்களும் அந்த பாறைக்குழம்புக்குள் பொசுங்கிப் போனார்கள்.

நாளா பக்கமும் பாறை குழம்பு விரட்ட... விரட்ட ... புகை மூட்டத்திற்கிடையே குழந்தையோடு இவளின் ஓட்டம் . வேகமாக ஓடவும் முடியாமல் கையில் உள்ள குழந்தையும் இவளும் மூச்சிரைக்க ஓடினார்கள் .

பாறை குழம்பு அருகில் வர வர கையில் உள்ள குழந்தை பாறை குழம்பு காலில் பட்டு கதறுகிறது . சற்று நேரத்தில் குழந்தைகளோடு தாமும் சாக போகிறோம் என்ற நிலமை வந்தது . கையில் இருக்கின்ற குழந்தையை வேறு வழியின்றி கை விடுகிறாள். தரதரவென்று இழுத்து வந்த அந்த குழந்தை கீழே விழுகிறது. பாறை குழம்பின் தீ நாக்குகள் ஈவு இரக்கமற்று குழந்தையை விழுங்கி விடுகிறது .

கையில் உள்ள குழந்தையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மூச்சுரைக்க இன்னும் வேகமாகவே ஓடுகிறாள் மரணம் துரத்த துரத்த ஓடுகிறாள்.

ஊருக்கு வெளியே ஓடி ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அவள் தலைவிரி கோலமாக "ஓ" வென அழுது கொண்டே இருந்தால் .எல்லோரும் அவளை பார்த்து ஆறுதல் சொன்னார்கள் அவளின் சோகம் குறையவே இல்லை .

ஏன் அழுகிறாய் நீ தான் குழந்தையை காப்பாற்றி ஓடி வந்து விட்டாயே ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று திரும்ப திரும்ப கேட்டார்கள்.

சோகத்தை அடக்கிக் கொண்டு தன்னுடைய நைந்து போன குரலில் அவள் சொன்னால் பக்கத்து வீட்டு பொம்பள தான் வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் திரும்பி வர்ரவரைக்கும் தன் குழந்தையை என் கிட்டு விட்டுட்டு பார்த்துக்க சொல்லிவிட்டு போனா அவ திரும்பி வர்றதுகுள்ள இப்படி ஆயிருச்சி .

நான் என் குழந்தையையும் அவ குழந்தையையும் எப்படியும் காப்பாத்திடும்னு ஓடி வந்தேன். அதுக்குள்ளற நெருப்பு கிட்டக்க வந்துருச்சு குழந்தையை பார்த்துக்க ன்னு சொல்லிட்டு போன அவ குழந்தையை நான் காப்பாத்தாம விட்டுட கூடாதுன்னு என் குழந்தையை விட்டுட்டு அவ குழந்தையை தூக்கி கொண்டு ஓடி வந்துட்டேன். கடைசில என் குழந்தையை காப்பாத்த முடியாம போச்சி . என்று திரும்பி திரும்பி மீண்டும் ஓவென அழுதாள்.

குழந்தையை இழந்து அனாதையாக அவள் நிற்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்....

  • 540