50 முறைக்கு மேல் பார்த்த படம்: இந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன்; இளையராஜா ஓபன் டாக்!
இந்த நடிகரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவரின் காலில் விழ நினைத்தேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். அந்த நடிகர் யார்?
தனது வாழ்நாளில் எத்தனையோ கதைகயை கேட்டிருந்தாலும், என்னை ஆச்சரியப்படுத்திய படம், அந்த படத்தை பார்த்து அதில் வில்லனாக நடித்த நடிகரின் காலில் விழ நினைத்தேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, முதல் படத்தில் இருந்தே இசையில் முத்திரை பதித்து வருகிறார். இசை மட்டுமல்லாமல், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல திறமைகளுடன் வலம் வரும் இவர், தனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது.
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமான இளையராஜா, அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ளார். கிராமத்து படமாக இருந்தாலும், நகரத்து கதையாக இருந்தாலும், இசையில் ஜாலம் செய்யும் வல்லமை படைத்த இளையராஜா, பாடல் பாடுவது, எழுதுவது என தனது தனித்திறமையுடன் வலம் வருகிறார்.
தமிழில் பல படங்கள் வெளியாகும் முன்பே அதன் கதைகளை கேட்டிருக்கும் இளையராஜா தான் ஒரு படத்தை மட்டும் விரும்பி கிட்டத்தட்ட 50 முறைக்கு மேல் அந்த படத்தை பார்த்துள்ளதாக கூறியுள்ளார். 1984-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான அமிடியாஸ் என்ற படம் தான். இந்த படம் ஆங்கில இசையமைப்பாளர் மொசாத் வாழ்கை வராலாறு என்பதால் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அந்த படத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்னை ஆச்சிரியப்பட வைத்தது.
இந்த படம் வில்லனின் பாளாஷ்பேக் காட்சியில் இருந்து தான் கதை தொடங்கும். இந்த படத்தின் ஒரு காட்சியை ஓப்ரா அரண்மையில் படமாக்கியிருப்பார்கள். இது பீரியட் படம் என்பதால், இப்போது இருக்கும் அரண்மனை செட்டப்பை அப்படியே காட்ட முடியாது. அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த படத்தின் இயக்குனரும் கேமராமேனும், லைட்ஸ் அனைத்தையும் எடுத்துவிட்டு, கேண்டில் ஏற்றி வைத்துள்ளனர். ஆனால் அதில் இருந்து வரும் புகை காரணமாக ஃபையர் அலாரம் அடித்துள்ளது.
இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், கேண்டில்ஸ் ஏற்றாமல், படத்தின் ரிகர்சலை எடுத்துள்ளனர். பலமுறை ரிகர்சல் முடிந்தவுடன், படப்பிடிப்பை தொடங்கி, கேண்டில் ஏற்றி புகை வந்து அலாரம் அடிக்கும் முன்பே அந்த காட்சியை விரைவாக படமாக்கியுள்ளனர். காட்சி முடியும்போது அதில் வில்லனாக நடித்த மொரிரி ஆபிரகாம் ஒரு நொடி எச்சில் முழுங்கிவிட்டு அப்புறம் என்ன நடந்தது என்று கேட்டிருப்பார்.
இந்த படத்தை 27-வது முறை பார்க்கும்போ தான் இதை நான் கவனித்தேன். ஒரு ஆள் 2-3 மணி நேரம் பேசிய பிறகுதான் இந்த மாதிரி எச்சில் விழுங்குவார்கள். இதை இயக்குனர் சொல்லி கொடுத்திருக்க முடியாது. ஆனால் அந்த கேரக்டரை பற்றி நன்றாக உணர்ந்துகொண்டு அந்த நடிகரே செய்திருப்பார். இவரை பார்த்தால் நேராக சென்று அவரது காலில் விழ வேண்டும் வேறு வழியில்லை என்று இளையராஜா கூறியுள்ளார்.
- 536