Feed Item

சாப்பாட்டு ராமன்கள்

ஞாயிற்றுகிழமைனா பிரியாணி தின்னே ஆவனும்ங்கிற ரேஞ்சில இருந்தானுக..

.

அடுத்து சரக்கடிச்சா பிரியாணி திங்கனும்னு கொண்டு வந்தானுக..

.

அப்புறம் மதியானம் ஒரு பிரியாணினு தின்னானுக..

.

சரினு பாத்தா ராத்திரி வரைக்கும் திங்க ஆரம்பிச்சானுக..

.

இப்ப என்னடானா நடுராத்திரி 12மணி வரைக்கும் தின்னுகிட்டு Midnight பிரியாணினு பெயரு வைக்கிறானுக..

.

அது போவ நைட்டு 2மணி 3மணிக்கு கூட கடை இருக்கு வியாபாரமும் நடக்குது..

.

இப்ப விடியகாலை 4மணிக்குலாம் Early Morning Fresh பிரியானினு சாப்பிட ஆரம்பிச்சிடானுவ..

.

இதுக்கு நடுவுல Dominosல பிசா.. KFCல சிக்கன்.. நடுவுல ரோட்டு கடைல பச்ச புள்ள ஆய் கலிஞ்ச மாதிரி எதோ கொள கொளனு இருக்கு கேட்டா "சவர்மா"வாம் அதையும் திங்கிறானுக..

.

சரி அவிங்க காசு அவிங்க தின்னுட்டு போவட்டும்னு விட்டா...

.

இத்தனையயும் தின்னுபுட்டு டீ கடைல வந்து "நாட்டு சர்கரை" போட்டு டீ கேக்குறானுவ..

.

ஏன்டானு கேட்டா அதான் உடம்புக்கு ஹெல்த்தியாம்...

போங்கடா நீங்களும் உங்க ஞாயமும்
  • 504