கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்க தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த அரசாங்கங்களின் பெரும் திருடர்கள் பிடிபடுவார்கள் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் இதுவரை பெரும் திருடர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரிசி மாபியாவை ஜனாதிபதி தனது பேச்சின் மூலமும் செயற்பாடுகளாலும் நிரூபிக்க வேண்டும்.
இது தொடர்பில் இந்நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
000
- 528