Feed Item
·
Added article

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த படங்கள் எல்லாம் தோல்வியை சந்திக்க சேது திரைப்படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து சினிமாவில் அவருக்கான இடத்தை வகுத்துக் கொடுத்தது. சேது படத்திற்கு முன்பு வரை தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு செகண்ட் ஹீரோவாக தம்பி கதாபாத்திரமாக என கிடைக்கிற ரோலில் நடித்து சினிமாவில் எப்படியாவது ஒரு நிலையான அந்தஸ்தை அடைய வேண்டும் என கடுமையாக போராடியவர் தான் விக்ரம். 

ஹீரோ என்றாலே அதற்கு உண்டான ஹீரோயிசம் இருக்க வேண்டும் என்றில்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று விதவிதமான கெட்டப்பை போட்டு இன்று கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்ரம் நடித்த பிதாமகன், காசி, அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவர் எப்படிப்பட்ட ஒரு நடிகர் என்பதை காட்டிய திரைப்படங்கள் ஆகும். இந்த திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டரை ஏற்று அதற்காக தன்னை வருத்தி நடித்திருக்கிறார் விக்ரம். இந்த நிலையில் இவருடைய நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீரதீர சூரன். 

விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும் அந்தப் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. 

ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது. அதனால் விடாமுயற்சி திரைப்படமும் பொங்கலுக்கு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதிக்காக வீர தீர சூரன் திரைப்பட டீம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சொன்ன தேதியில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரவில்லை என்றால் அந்த தேதியை லாக் செய்து விடுவார்கள் வீர தீர சூரன் திரைப்பட குழு.

பொங்கலுக்கு விடாமுயற்சி வரும் பட்சத்தில் வீர தீர சூரன் படத்தை டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் சில பேர் பொங்கலுக்கு 10 நாட்கள் விடுமுறை இருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் வந்தால் என்ன ?ஒரே படத்தையா பத்து நாட்கள் பார்க்கப் போகிறார்கள்? விடாமுயற்சி திரைப்படமும் வீரதீர சூரன் திரைப்படமும் ஒரே நேரத்தில் வந்தால் அப்படி என்ன ஆகிவிடப் போகிறது என புலம்பி வருகின்றனர். 

 

  • 499