Feed Item
·
Added a post

நான் ரொம்பக் கோபமாக வீட்டை விட்டு வெளியேறினேன்... அவசரத்தில் அப்பாவின் ஷூவை மாட்டிக்கொண்டு வெளியேறும் அளவுக்கு அவ்வளவு கோபம்.

இனி நான் பெரிய ஆள் ஆன பிறகுதான் வீட்டுக்கு வருவேன்... அவ்வளவு கோபம். பின்னே இருக்காதா என்ன? கல்லூரி போகும் மகனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்கி கொடுக்க முடியாத அப்பா…. 'நீங்கள், நான் ஏன் பெரிய இன்ஜினியர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்? உங்கள் கடனையெல்லாம் அடைப்பதற்கா?'

மண் ரோட்டில் நடந்தவுடன், காலணியில் ஏதோ சிக்கியதை உணர்ந்தேன். என் கால் விரலில் இருந்து கொஞ்சம் ரத்தம் கொட்டியது... பார்த்தால் பூட்ஸில் ஆணி இருந்தது. மிகவும் வலித்தது, பொறுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றவுடன்... என் கால்களில் ஈரமாக உணர்ந்தேன், சாலையில் தண்ணீர் இருந்ததைக் கவனிக்க வில்லை. அவ்வளவு கோபம். காலை தூக்கிப் பார்த்தபோது ஷூவின் சோல் கிழிந்து இருந்தது... மேலும் கோபத்தைக் கூட்டியது.

பேருந்து நிலையத்தை அடைந்தபோது ஒரு மணி நேரமாக பேருந்துகள் இல்லை... சோதனை மேல் சோதனை. இன்று நான் என் தந்தையின் பர்ஸையும் கொண்டு வந்திருந்தேன். பர்ஸை அவர் யாரையும் தொட விடாதவர். இந்த பர்ஸில் கண்டிப்பாக நிறையப் பணம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். இதுதான் அவரிடத்தில் நான் எடுத்துக்கொள்ளும் கடைசி பணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பர்சை திறந்து பார்த்தேன். இருந்ததோ 70 ரூபாய் தான். அதோடு அவரின் சிறிய டைரி... எவ்வளவு விஷயங்கள் மறைச்சு வைத்திருப்பார் அப்பா. அம்மாகிட்ட இருந்துகூட தெரியாமல் வைத்திருக்கும் டைரி ஆயிற்றே ? அதனால் தான் யாரையும் பர்சைத் தொட விடமாட்டார் போலும்.

தெரிஞ்சுக்கலாம் என்று திறந்து படித்தேன். அதில் ஒரு பக்கத்தில் 'பையனின் மடிக்கணினிக்கு 40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டேன். ஆனால் அதற்கு கொடுக்க வேண்டிய வட்டியை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. இதில் இந்த ஷூ வேறு. மாற்ற வேண்டுமென கடந்த 3, 4 மாதமாக நினைத்தாலும், ஏதாவது ஒரு செலவு. பையனின் படிப்புச் செலவைப் பார்த்தால் முடியுமா? அடுத்த மாதம் புது ஷூ வாங்கலாம்'

மற்றொரு பக்கத்தில்….

'அம்மா தினமும் தன் உடைந்த கண்ணாடியை மாத்த வேண்டுமென தினமும் கேட்கிறாள். போனஸ் வந்தவுடன் கட்டாயமாக மாத்திவிடலாம். அதுவரை அம்மாவுக்கு ஏதாவது ஒரு சாக்கு சொல்ல வேண்டியது தான்...

மூன்றாவது பக்கத்தில் 'பழைய ஸ்கூட்டரைக் கொடுத்துவிட்டு புதிய மோட்டார் சைக்கிளை தவணை முறையில் வாங்கி பையனுக்கு கொடுக்கலாம் என்றால் அதற்கும் இப்போது வழி இல்லையே? போனஸ் எது, எதற்குத் தான் ஆகுமோ? கடவுள் விட்ட வழி. பார்ப்போம். அதன் பின் நான் ஆபிஸுக்கு பஸ்ஸில் போனால் தான் என்ன?…

டைரியைப் படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது. சத்தமாய் அழவேண்டுமென இருந்தது. பக்கத்தில் ஆட்கள் இருந்ததால் மிகவும் சிரமப் பட்டு அடக்கிக் கொண்டேன்.

அந்த ஆணி காலில் குத்தவில்லை.. உடனே ஓட்டமும், நடையுமாக வீட்டை அடைந்தேன். அப்பாவும் இல்லை, ஸ்கூட்டரும் இல்லை. ஓஹோ - புரிந்து விட்டது. நான் அப்பாவைத் தேடி பைக் ஏஜென்சிக்கு ஓடி வந்தேன் . அப்பா இருந்தார். நான் அவரைக் கட்டிக் கொண்டு , கண்ணீரில் அவரின் தோள்களை நனைத்தேன்.

“அப்பா.... எனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டாம் ... உங்களுக்கு புதிய ஷூ வாங்கிக் கொள்ளுங்கள். பாட்டிக்கு புதிய கண்ணாடி வாங்குங்கள். நான் கட்டாயம் நன்கு படித்து பெரிய ஆளாக வருவேன். அதுவும் உங்கள் வழியில்… நீங்கள் கவலையே படாதீர்கள்.”

அவரைப் பத்திரமாக ஸ்கூட்டரில் கூட்டிக்கொண்டு வீடு அடைந்தோம். மிகவும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்தது. என்ன பாவம் செய்ய இருந்தேன்? கடவுள் தான் காப்பாற்றினார். மேலும் யோசித்தேன். ஒவ்வொரு உணர்ச்சியையும், சோகத்தையும் டெபாசிட் செய்யும் வங்கி "அம்மா"... மேலும் நம் "அப்பா" என்பது நம் கனவை பேலன்ஸ் இல்லாவிட்டாலும், நனவாக்க முயலும் கிரெடிட் கார்டு...

இந்த உண்மையை உணராமல் எப்படி இருந்தேன்? எனக்கே வெட்கமாக இருந்தது.

  • 494