கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை.
சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். படத்தில் அவரின் காட்சிகள் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இதையடுத்து அவரை நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இப்போது அவர் புற்று நோய் பாதிப்புக் காரணமாக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய உடல்நிலைப் பற்றி பேசிய சிவராஜ்குமார் புற்றுநோய் என்று பெயரை சொல்லாவிட்டாலும் தான் சிகிச்சை எடுத்துவருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்கு செல்லும் முன்னர் அவரும் அவர் மனைவியும் திருப்பதி சென்று முடிக் காணிக்கை செய்துள்ளனர்.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை
- 435