2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 4 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு 361 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் 2022 ஆம் ஆண்டுவரை மதுவரி அனுமதிப்பத்திர விநியோகத்துக்கு அரசாங்கம் கட்டணம் எதனையும் அறவிட்டிருக்கவில்லை.
எனவே, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் பொருட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய, நேரடி வரியை இழப்பதற்கு மாற்றாக, அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்குக் கட்டணத்தை அறவிட்டு மதுவரி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மதுவரி ஆணையாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கம் இலவசமாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை.
எனினும், நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த மதுபான அனுமதிப்பத்திர விநியோக செயற்பாட்டைக் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை கவலையளிப்பதாகவும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
000
- 406