Feed Item
·
Added a news

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான சட்டத்தை பொலிசார் அமுல்படுத்தியுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் -

இன, மத பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வடக்கிலும் தெற்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு தேசிய ஒற்றுமைக்கான ஆணையை வழங்கியுள்ளோம்.

கடந்த சில நாட்களாக, மாவீரர் கொண்டாட்டங்கள் குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இறந்த உறவினர்களை நினைவுகூர உரிமை உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அந்த அமைப்புக்கு சொந்தமான கொடிகளைக் காட்டிக் கொண்டாடுவதற்கு வாய்ப்பில்லை என நான் கூறிய கருத்தை திரித்து, தவறான அர்த்தம் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளேன்.

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களின் அடிப்படையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான திரிபுபடுத்தப்பட்ட பதில்கள் பரப்பப்பட்டன.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி அவை வடக்கில் நடத்தப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது.

மேலும் அவ்வாறான புகைப்படங்களில் சில வெளிநாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் சமூக ஊடகங்களை நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்று நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் இந்த போலிச் செய்தியை உருவாக்கியுள்ளது.என தெரிவித்தார்

000

  • 196