Feed Item
·
Added a news

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடியை ஒடுக்குவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் வாரியம் ஒரு முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்,

மேலும், குறுகிய கால தீர்வாக, அரசாங்கம் விரைவில் வெளி நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

000

  • 194