Feed Item
·
Added a news

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.  கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரு அணி இரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100 க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கொல்லப்பட்டனர்.  அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்ததுடன், வன்முறையில் ஈடுபட்டனர்.

நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த இரசிகர்கள் மைதானத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

000

  • 517