Feed Item

தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 17ஆம் தேதி

  

மேஷம் -ராசி:

மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோக பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

ரிஷபம் ராசி:

குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். நட்பு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம் -ராசி:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

 

கடகம் -ராசி:

அக்கம், பக்கம் இருப்பவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகள் மூலம் விரயங்கள் ஏற்படும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம் -ராசி:

விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மேம்படும். சிக்கனமாகச் செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தாமதம் மறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

 

கன்னி -ராசி:

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவீனத் தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம் -ராசி:

குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தன வரவுகளில் உண்டான நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதிற்குப் பிடித்த விதத்தில் வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும் எண்ணங்களும் உருவாகும். தடைகள் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்- ராசி:

புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். இனம் புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு விமர்சனங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். தேர்ச்சி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

 

தனுசு -ராசி:

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மனதில் மேம்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை காக்கவும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம் -ராசி:

சபை சார்ந்த துறைகளில் பொறுமையைக் கையாள வேண்டும். மனதில் நினைத்த எண்ணங்களைச் செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கும்பம் –ராசி:

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். கேளிக்கையான செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிலும் நேர்மையுடனும் கடமையுடனும் செயல்படுவீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

மீனம் -ராசி:

பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 505