Feed Item
·
Added article

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் சமீபத்தில் ரிலீஸாகி குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வந்த நிலையில் தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விக்ரம் வந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மறுபடியும் தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

  • 450