Feed Item
·
Added a news

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  பொன்னாலை செல்லும் வீதி போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் தாம பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவரைல தெரிவித்துள்ளர்.

குன்றும் குழியுமாக இருந்த இவ்வீதி கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வீதியை வெள்ளம் மூடி இருந்தமையால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளில் பயணித்த பலர் இதில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில் இவ்வீதியை புனரமைத்து தருமாறு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பொறியியலாளருக்கு தெரியப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை செப்பனிடப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இது தொடர்பில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது.

இதேநேரம் அடுத்த மழை ஆரம்பமாவதற்கு முன்பு தற்காலிகமாகவேனும் குறித்த வீதியை சீரமைத்துத் தருமாறு மக்கள் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

  • 1036