Feed Item
·
Added a news

ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடததக்கது

000

  • 1039