Feed Item
·
Added a news

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அப் படகில் சுமார் 200 இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில், திடீரென படகு ஆற்றில் விழுந்தமையால் பயணிகள் நீரில் விழுந்து தத்தளித்துள்ளனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

நீரில் தத்தளித்த மக்களை உள்ளூரைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் வந்து மீட்டுள்ளனர். மீட்பு பணியின்போது 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 100 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனவே இவ் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு மூழ்கியதற்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவில்லை. ஆனால், படகு தாங்கும் நிறையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமை ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

  • 1041