இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் வீதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவின் போது சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண்மேடு மற்றும் பாறைகள் விழுந்துள்ளன.
இந்த அனர்த்தத்தினால் குறித்த பேருந்தின் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சம்பவத்தின் போது காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000
- 470