உக்ரைன் நாட்டின் எரிசக்திஉள்கட்டமைப்பைக் குறிவைத்து ஒரே இரவில் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது நாட்டின் "எரிசக்தி துறை மீண்டும் ஒரு பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவசர மின்வெட்டு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - நாட்டின் முழு எரிசக்தி கட்டமைப்பும் குறிவைக்கப்படுவது தொடர்பில் உக்ரேனிய அதிகாரிகள் சில காலமாக எச்சரித்து வந்தனர்.
ரஷ்யா, குளிர்காலம் முழுவதும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதற்காக கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மாதத்தில் இதுபோன்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். உக்ரைனின் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற ஆணையர் டிமிட்ரோ லுபினெட்ஸ், ரஷ்யாவின் நடவடிக்கைகள் இராணுவ உணர்வை ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறார்.
இந்த தாக்குதல்கள், பொதுமக்களை அச்சுறுத்துவதையும், மனிதாபிமான நெருக்கடியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கியேவிற்கு மேற்கே சுமார் 260,000 மக்கள் வசிக்கும் வெளிப்புற நகரமான சைட்டோமிரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் குடி நீர் விநியோக நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மின் துண்டிப்பு காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும், அதனால் ஜெனரேட்டர்களை இயக்க முயற்சிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் நாடு தழுவிய தாக்குதலுக்கு மத்தியில், கியேவில் வான் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிய்வ் முதல்வர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழன் அதிகாலை, உக்ரேனிய விமானப்படை நாடு தழுவிய வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்திருந்தது. ரிவ்னே, வின்னிட்சியா, க்ரோபிவ்னிட்ஸ்கி, பால்டா மற்றும் மைகோலைவ் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
000
- 469