Feed Item
·
Added a news

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

இதனடிப்படையில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும்

யாழ். பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேரும்,

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 371 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேரும்

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 416 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும்,

காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்

மேலும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும்,

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும்,

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும்,

அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும்

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும்

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும்

வேலணை பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழு பேரும்

கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும்

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

000

  • 136