Feed Item
·
Added a post

ஒரு பய..அவனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போனான். சொன்னான்.

டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே..

டாக்டரு சொன்னாரு..

தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!

ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?

ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுரை ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹ .

ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன்.

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.

ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில ப்ரஞ்சு ப்ரைஸ், காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.

அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே?

அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு.

ஓ! எப்புடீ?நம்ம திருநெல்வேலி அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்.

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.

என்னா தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க!

அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே..

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

  • 207