Feed Item
·
Added a post

ரயில்வே ஸ்டேஷனில் முன்பெல்லாம் ஓட்டுனர் ஒரு பெரிய வளையத்தை போட்டுவிட்டு மற்றொரு வளையத்தை வாங்கி செல்வார். அதிலிருந்து ஒரு Metal ball எடுக்கப்படும். அது எதற்காக? அது எப்படி பயன்படுத்தப்படுகிறது?

பிரம்பு வளையத்தின் மையத்தில் உருண்டை யாக இருக்கும் அந்த கீ ஒரு குறிப்பிட்ட எடை இருக்கும்.ஒற்றை வழித்தடத்தில் ஒரு ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு வரும் போது எதிரில் அல்லது அடுத்த நிலையத்தில் உள்ள ரயிலை இது வரும் தடத்தில் அனுமதி அளிக்காமல் இருக்க.இரண்டாவது ஸ்டேஷனில் உள்ள இயந்திரத்தில் அந்த குண்டை போட்டால் தான் இரயில் இரண்டாம் ஸ்டேஷன் வந்தடைந்தது என உறுதியாகும். இது ஒன்றாவது ஸ்டேஷனுக்கும் முண்றாவது ஸ்டேஷனுகும் தெரிவிக்கப்படும் ஊர்ஜிதம் ஆகும்.

இந்த குண்டு இரண்டாவது ஸ்டேஷனில் போட்டால்தான் ஒன்றாவது ஸ்டைஷனுக்கு வண்டி செல்ல சிக்னல் கொடுக்க முடியும்.

இரண்டாவது ஸ்டேஷனில் உள்ள ஒரு குண்டை ,இரண்டாவது ஸ்டேஷனில் இருந்து மூன்றாவது ஸ்டேஷனுக்கு இது போல் கொடுத்து அனுப்ப வேண்டும்.

ஒன்றாவது ஸ்டேஷனில் இருந்து இரண்டாவது ஸ்டேஷனுக்கு வந்த குண்டு மீண்டும் ஒன்றாவது ஸ்டேஷனுக்கு செல்லும் வண்டி யில் கொடுத்தனுப்ப படும்.

ஒன்றிலிருந்து இரண்டு க்கு வரும் குண்டு தான் மீண்டும் ஒன்றுக்கு போக வேண்டும்.

இரண்டில் இருந்து மூன்றுக்கு போகும் குண்டுதான் இரண்டு க்கு திரும்ப வேண்டும்.

குண்டு எடையில் வித்தியாசம் இருக்கும்.மாறினால் சிக்னல் திறக்காது.

இரயில் ஸ்டேஷனுக்கு வந்தது என்ற உத்திரவாத செயல்.

நா பாத்தேன் வந்துச்சு,நீங்க பாத்தீங்களா வந்ததை , வநதுடுச்சினு நெனச்சேன்

இப்படியெல்லாம் சொல்லாமல் இருக்க.

ஸ்டேஷனில் நிற்க்காமல் செல்லும் ரயிலில்,என்ஜின் உதவியாளர் உள்ளே நுழைந்த வுடன் அதை பிளாட்பாரத்தில் எறிந்து விட்டு,தயாராக காட்டப்படும் வளையத்தை இலாவகமாக கையில் வாங்கி விடுவார்கள்.சில நேரம் தவறி விழுந்து விடும்.விழுந்தால் நிறுத்தி எடுத்து தான் செல்ல வேண்டும். இந்த குண்டை கொடுக்காமல் ஒரு ஸ்டேஷனை கடக்க முடியாது.

அப்போதெல்லாம் அந்த அளவிற்கு ரயில் விபத்து ஏற்படுவது இல்லை. இந்த நவீன யுகத்தில் தான், ஆட்டோமேடிக் சிக்னல் என்று சொல்லிக் கொண்டாலும், ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் ரயில் வந்து மோதி விபத்துக்குள்ளானது.

  • 219