சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானின் பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதால் ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார்.
ஆனால் அவருக்கும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சிக்கும் மக்களிடையே இப்போதும் ஆதரவு உள்ளது.
அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இம்ரான் கான் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி போராட்டங்கள் மூலம் அவரை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க எல்லையில் கொள்கலன்களை வைத்து மூடியுள்ளனர்.
மேலும், முக்கிய சாலைகளை துண்டித்து, பிடிஐ கட்சி வலுவாக உள்ள பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களுடன் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளையும் மூடியுள்ளனர்.
இந்த நிலையில், மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசும் உள்துறை அமைச்சகமும் இன்று எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
000
- 103