Feed Item
·
Added a post

மழைக்காலம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜலதோஷம், சளி, இருமல் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால் வெந்நீர் தவறாமல் குடித்தால் இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

வெந்நீர் குடித்தால் அதிலிருந்து வெளிப்படும் நீராவியை மூக்கு துவாரங்கள் வழியாக ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். வெந்நீர் வயிறு, குடல் வழியாக செல்லும்போது உடல் கழிவுகளை அகற்றுவதற்கு துணை புரியும்.

 செரிமானத்திற்கும் உதவும். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் மனநிலையையும் வெந்நீர் குடிப்பதால் மேம்படுத்தலாம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெந்நீர் குடிப்பதால் மலச்சிக்கல் போகும் என்றும் உடலில் நீர் ஏற்றத்தை தக்க வைப்பதற்கும், குடல் இயக்கங்களை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.

  • 626