Feed Item

வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து இருப்பதால் கடலோர பகுதிகளை தவிர, உள் தமிழகம், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காற்றின் குவியல் கடலோர பகுதியை கடந்து உள் தமிழகத்திற்கு இடம் புகுந்ததால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிகிறது. இன்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்,

  • 802