Feed Item
·
Added article

கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வந்த அவரின் பிறந்தநாளைக் கூட பச்சன் குடும்பம் கொண்டாடவில்லை.

இதனால் அவர்கள் விவாகரத்து செய்யப்போவது உறுதி என்பது போல செய்திகள் வெளியாகத் தொடங்கின. இன்ஸ்டாகிராம் தளத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவரான அபிஷேக்பச்சனை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

  • 261