முதலைகள் முதுமையால் இறப்பது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். உயிரியல் முதுமையால் முதலைகள் ஒருபோதும் இறக்காது. அவை தொடர்ந்து வளர்கின்றன.
சாப்பாடு இல்லாத காரணத்தினாலோ, உடம்பு சரியில்லாமலோ தான் இறக்கின்றன.
அப்படி என்றால், முதலைகளுக்கு அழிவு இல்லையா? இல்லை. ஆனால் அவற்றின் வாழ்நாள் நீண்டுகொண்டே போகும். ஒரு முதலையின் சராசரி வாழ்நாள்,
70 ஆண்டுகள் அல்லது கூடுதலாக இருக்கலாம். ஆனால் மனிதர்களால் வளர்க்கப்படுகின்ற முதலைகளின் வாழ்நாள் 100 ஆண்டுகளையும் கடக்கின்றது.
அப்படி ஒரு ஆண் முதலை ரஷ்ய உயிரியல் பூங்காவில் 115 ஆண்டுகள் வாழ்ந்தது.
ஏன் முதலைகள் இப்படி நீண்ட காலம் வாழ்கின்றன? கடினமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றின் திறன்தான் மிகப்பெரிய காரணம் மூன்று ஆண்டுகள் கூட உணவு இன்றி வாழ முடியும். எனவேதான், அவை தங்கள் ஆற்றலை மிகவும் கவனமாக. சரியான நேரத்தில் பயன்படுத்துகின்றன.
- 1214