Feed Item
·
Added a news

கடந்த நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது.

இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 6 ரூபாவினால் குறைத்து 371 ரூபாவாக குறைத்துள்ளது

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 311 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 283 ரூபாய் என்ற விலையில் மாற்றமின்றி தொடர இலங்கை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாய் என்ற விலையில் மாற்றமின்றி தொடர இலங்கை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

000

  • 1002