Feed Item
·
Added a news

இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தம்: வலேரி பிகலியோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான சட்டப்பூர்வ வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதற்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கும் இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரு நாடுகளின் சுங்கத் தலைவர்கள் தலைமையில் மாஸ்கோவில் ‘சுங்க விஷயங்களில் பரஸ்பர உதவி ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி. சரத் ​​நோனிஸ் ரஷ்ய கூட்டமைப்பின் பெடரல் சுங்க சேவையின் தலைவர் வலேரி பிகலியோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

  • 959